Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு… 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி… பாராட்டிய சக மாணவிகள், ஆசிரியர்கள்…!!!

விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவி ஒருவர் ஆசிரியை உதவியுடன் எழுதினார்.

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவருடைய மகள் 17 வயதுடைய ஷர்மிளா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக அவருடைய தாயுடன் பைக்கில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த பைக் அவருடைய ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அப்போது மாணவி பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வாக உயிரியல் தேர்வை அவசியம் எழுத வேண்டும். நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்வது தான் என்னுடைய குறிக்கோள். எனவே அதற்கு உதவி செய்யுங்கள் என்று மருத்துவரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனை செய்து மாணவிக்கு காலில் மாவுக்கட்டு போட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார்கள். காலை 10:45 க்கு வந்த மாணவி ஷர்மிளா தனக்கு நேர்ந்த விபத்து குறித்து அங்கிருந்த ஆசிரியரிடம் கூறினார். அதன்பின் ஷர்மிளா தரைதளத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அவர் சொல்வதை எழுதுவதற்கு ஒரு ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி மாணவி கேள்விக்கு பதில்கூற ஆசிரியர் அதை விடைத்தாளில் எழுதிக் கொடுத்தார். மேலும் ஷர்மிளாவுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவி தைரியமாக வந்து தேர்வு எழுதியதை பார்த்து சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Categories

Tech |