ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் தன் மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 300 கிலோ எடை கொண்ட அவரது பைக், சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றதில் இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். அவரது மகன்தான் அவரை தூக்கி கால் உடைந்திருக்கும் அச்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Categories
விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்…. மருத்துவமனையில் அனுமதி….!!!!
