Categories
சினிமா

விபத்தில் சிக்கிய அர்னால்டு…. எதிரெதிரே மோதிய கார்களால் பரபரப்பு….!!!!

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் (66). இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பிரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது முன்னாள் கலிபோர்னியா ஆளுநர் GMC யூகோனின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வாகனமும் யூகோனின் வாகனமும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்நிலையில் அதே வழியில் சென்றுகொண்டிருந்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் காரும் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான கார் மீது மோதி, அதன் மீது ஏறி கவிழ்ந்தது. இதனிடையில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பெண் ஒருவருக்கும், ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |