மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர்.
இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அருகில் இருந்த நகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்ததால் தாமதமானது. அப்பகுதியில் புதிய ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜேசிபியில் காயமடைந்தவரை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#WATCH | Madhya Pradesh: Accident victim in Katni taken to hospital in a JCB as the ambulance got late in arriving at the accident spot (13.09) pic.twitter.com/f2qcMvUmcV
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 14, 2022