Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் மர்ம நபர்கள் கைவரிசை”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம்-வத்தலகுண்டு இடையேயான மெயின் ரோடு சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தவறை கீழே விழுந்தார்.

அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் உதவி செய்வது போல் வந்தார்கள். பின் கார்த்திக்கை தூக்குவது போல் நடித்து மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டு, 2000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்கள். இதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |