Categories
மாநில செய்திகள்

விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு: 6 அரசு பேருந்துகள் ஜப்தி…. அதிரடி காட்டிய நீதிமன்றம்……!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அருகில் அப்பாச்சி கவுண்டன்பதியில் தொழிலாளி காளிமுத்து (27) வசித்து வருகிறார். இவர் கடந்த 12/09/2017 அன்று கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவருக்கு மண்ணீரல் மற்றும் சிலஉறுப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் காளிமுத்து மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காளிமுத்துவுக்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூபாய் 14 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்க உத்தரவு பிறப்பித்தது.
எனினும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இத்தொகையை வழங்கவில்லை. அதனை தொடர்ந்து காளிமுத்து சார்பாக வக்கீல் தன்ராஜ், நிறைவேற்றக்கோரும் மனுவை தாக்கல் செய்தார். பின் மனுவை விசாரித்த நீதிபதி முனிராஜ், அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வக்கீல் தன்ராஜ், காளிமுத்து மிகுந்த பாதிப்பில் உள்ளதாலும், வறுமையில் இருப்பதாலும் ஒரு பேருந்தை மட்டும் ஜப்தி செய்தால் மட்டும் தொகையை கொடுக்க மாட்டார்கள். ஆகவே குறைந்தது 6 பேருந்துகளையாவது ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி 6 பேருந்துகளை ஜப்திசெய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று ரயில் நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த 6 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் 6 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டதால் வாளையார், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு போகும் பயணிகள் சிரமப்பட்டனர். அதன்பின் மாற்று பேருந்துகள் வாயிலாக சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவ்வாறு ஒரு வழக்குக்கு 6 அரசு பேருந்துகள் ஜப்திசெய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும். நீதிமன்ற வளாகத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கோர்ட்டு வளாகம் பஸ் நிலையம் போல் காட்சியளித்தது.

Categories

Tech |