வலிமை திரைப்படத்தில் அஜித் ட்ரோன் கேமராவை இயக்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித், போனி கபூர், எச்.வினோத் இக்கூட்டணியே அஜித்தின் 61வது படத்திலும் தொடர்கின்றது. இந்நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் ட்ரோன் கேமராவை இயங்கியதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இது குறித்த புகைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அஜித் ட்ரோன் கேமராவை இயக்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது.