ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தினம் தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது ஒகேனக்கல்லில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எண்ணெய் மசாஜ் செய்து சினிபால்ஸ் மற்றும் காவேரி ஆற்றில் குளிக்கின்றனர்.
அதன்பின்னர் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தங்களது குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.