Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு தடை…. உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை பரவாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிகளை அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2ஆம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே வழிகாட்டுதலுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |