தமிழகத்தில் ”விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்,” என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வீட்டு வசதி வாரியத்தில் கட்டி முடிக்கப்பட்டு, காலியாக உள்ள வீடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. இதற்கான காரணங்களும், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த எண்ணிக்கை விபரங்கள், விரைவில் வெளியிடப்படும். வீடு தேவைப்படுவோர் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.வீட்டுவசதி வாரிய நிலங்களை, போலி தடையில்லா சான்று வாயிலாக பயன்படுத்துவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஈடுபட்டுள்ள தரகர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை பெருநகர் பகுதியில், விதிமீறல் கட்டடங்களை கண்காணிக்க, தனிக்குழு அமைக்கப்படும். இனி வரும் காலங்களில், விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்.சென்னை, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பஸ் நிலை