திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்து விட்டது என்று புனித ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 46. இன்று காலை வழக்கம்போல் தனது உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித ராஜ்குமார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி புனித ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘ஒரு திறமையான நடிகரை விதி நம்மிடம் இருந்து பறித்து விட்டது. புனித் ராஜ்குமார் திறமைக்காகவும், ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார்’ என்று தெரிவித்து இருந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் புனித் ராஜ்குமார் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.