Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியை”….. முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு….!!!!!

விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெங்களூருவில் தலைமை இடமாக கொண்டிருக்கும் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், கல்வி பெருவாரியாக சென்றடையாத பகுதிகளில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கல்வி குறித்து அறிவியல் ரீதியான விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்களே ஊக்கப்படுத்த சுற்றுலா பயணமாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் இழந்தகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியை லட்சுமி மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் நான்கு மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே இருக்கும் தும்பாவில் அமைந்திருக்கும் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அண்மையில் சென்று வந்தார்கள்.

இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் அங்கு ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் தேவைப்படுவதை காணும் நிகழ்ச்சிக்கு சென்றனர். இந்தநிலையில் அங்கு சென்று வந்த மாணவ-மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் பாராட்டினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Categories

Tech |