கனடா விண்வெளியில் இரண்டாவதாக காலடி எடுத்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கனடா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப போகும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற உள்ளது. அதாவது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கனடாவும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. மேலும் கடந்த 50 வருடங்களில் முதன்முதலாக கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் நாசா விண்வெளி வீரர்களுடன் இணையவுள்ளார். வரும் 2023 ஆம் வருடத்தில் Art emis 2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதன் முதலாக நிலவில் காலடி எடுத்து வைக்க இருக்கும் கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் chris hadfield. தற்போது அவர் இதுபற்றி, தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அதில் அவர் விரைவில் கனடாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்ல இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இரண்டாம் விண்வெளிப்பயணம் சில காலங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை நாசா மற்றும் கனடாவின் விண்வெளி ஏஜென்ஸி, விண்வெளிக்கு செல்ல போவது யார்? என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், மற்றொரு கனடாவை சேர்ந்த விண்வெளி வீரரான ஜெர்மி ஹஸன் என்பவர் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது கனடாவிற்கும், கனடா மக்களுக்கும் உணர்ச்சி பூர்வமான வாய்ப்பாக இருக்கும் என்று ட்விட் செய்துள்ளார். மேலும் கனடா விண்வெளி வீரர்களுடன் kanadarm 3 என்னும் ரோபோ ஒன்றையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.