அமெரிக்காவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயை மீட்பு குழுவினர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
அமெரிக்காவிலுள்ள பென்சிலிவேனியா என்னும் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியுள்ளது.
இந்த அதிபயங்கர தீயை மீட்பு குழுவினர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.