Categories
மாநில செய்திகள்

விண்ணப்பங்கள் நிராகரிப்பு….. தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்….!!!

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிக்க வேண்டாம் என தமிழக அரசிடம் டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 3 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 13 லட்சம் பேர் உதவித்தொகைக்கு பதிவு செய்து விட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக உதவித்தொகை பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இது மாதிரியான பரிசீலனை அல்லது நிராகரிப்போர் வெளிப்படைத் தன்மையோடு முன்னுரிமை அடிப்படையில் நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த நிராகரிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இவ்வாறு நடக்காமல் இருக்க நேற்று தமிழகத்தின் புதிய வருவாய் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பணீந்திர ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து எடுத்துரைத்தோம்.

இதற்கு முன் அரசாணை எண் G.O.(MS)No.300 செயல்படாமல் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அரசாணை எண் 300-ன் படி செயல்படும் என ஒப்புக்கொண்டனர். அதனால், தேவையில்லாமல் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |