Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு…. திற்பரப்பு அருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |