விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று கோடை வெப்பத்தை தனித்து வருகின்றார்கள். இந்நிலையில் பிரபல சுற்றுலா தலமான குமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர்.
கடலில் ஆனந்தமாக குளியல் போட்டபின் பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததால் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.