சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவில் விடுமுறையை களிப்பபதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இசை, நடன, நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறையைக் களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சேலம்- ஓமலூர் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பூங்காவில் வாகனங்களை நிறுத்துவற்கு இட வசதி செய்து தர வேண்டுமென அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது அதிகரித்து வரும் கொரோனாவினால், மக்கள் கூட்டம் அலைமோதிய இடத்தில் முக கவசம் அணியாமல் மக்கள் அனைவரும் இருந்ததால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.