Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விடுமுறை.! இன்று இந்த 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் சில  பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்..

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலைப்பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவளூர்  மற்றும் தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |