திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படவேண்டும். இதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த வகையில் மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.