விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு லேசான சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது.
இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்ததால் விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. இதனையடுத்து கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை காவல்துறையினர் அவ்வப்போது சரி செய்து விட்டனர்.