Categories
உலக செய்திகள்

விடுமுறைக்காக இப்படி ஒரு நாடகமா?… இளைஞரின் பரிதாப நிலை…!!!

அமெரிக்காவில் அலுவலகத்தின் விடுமுறைக்காக இளைஞர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மாகாணத்தில் அரிசோனா பகுதியிலுள்ள கூலிட்ஜ்  நகரில் 19 வயது இளைஞரான பிராண்டன் சோல்ஸ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அவர் கை ,கால்கள் இரண்டும் பெல்ட்டால் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் ,அவர் பணிபுரிந்து வரும் தொழிற்சாலை பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் மயங்கிய நிலையில் கீழே இருந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மக்கள் அவரைக் கண்டவுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிராண்டனிடம் நடந்ததை பற்றி விசாரித்துள்ளனர். விசாரித்தபோது தனது தந்தை பலரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்துவதற்காக என்னை கடத்தியதாகவும், கூறினார். என்னை வைத்துஎன் தந்தையை மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னை கடத்தியிருக்கலாம் என்று கூறினார்.

ஆனால் அவர் கடத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் அந்த வழியில் உள்ள கேமராக்களின் இல்லாததாலும் மற்றும் ஒரு உடலில் கடத்தலுக்கான எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே போலீசார் அவரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

அதில் பிராண்டன் கூறுகையில். என்னை யாரும் கடத்தவில்லை என்றும் வேலை செய்ய விருப்பமில்லாமல் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பதற்காக நாடகம் நடத்தியது அவர் ஒத்துக்கொண்டார். உண்மையைக் கூறிய காரணத்தினால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். விடுமுறைக்காக பிராணனின் கடத்தல் நாடகத்தை தெரிந்த தொழிற்சாலை நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது

Categories

Tech |