Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விடுப்பு தர மறுத்ததால் தடைபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகள் நிச்சயதார்த்தம்”….. டிஜிபி சைலந்திர பாபு ஆறுதல் கடிதம்….!!!!!

விடுப்பு தர மறுத்ததால் மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் கூறி டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகளின் நிச்சயதார்த்தத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் வர இருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு தன்னை அனுப்பியதால் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதாக ஆடியோ ஒன்றை வருத்தத்துடன் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவருக்கு ஆறுதல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, தங்கள் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும் அதில் கலந்து கொள்ள தங்களுக்கு விடுப்பு வழங்காததால் நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்தும் மிகவும் மன வருத்தம் அடைந்தேன். இதுபோல முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகளின் விடுப்பு மறுக்கக்கூடாது என மேல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இனி வரும் நாட்களில் தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த எதுவாக போதுமான நாட்கள் விடுமுறை வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |