விடுதியில் இருந்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் அமைந்துள்ள மில்லில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போகியுள்ளார்.
இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர் மரகதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயலட்சுமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.