Categories
தேசிய செய்திகள்

விடுதியில் சடலமாக கிடந்த மாணவி…? காரணம் என்ன…? வெளியான பகீர் சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரிமாகுலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். இதன்பின் அவருடன் படிக்கும் சக மாணவிகள் சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ,அவரை  அங்கு காணவில்லை.

இதனால் பதட்டத்துடன் விடுதி முழுவதும் தேடி பார்த்தும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து விடுதியின் குளியலறைக்கு சென்று பார்த்தபோது வெளிப்பக்கமாக கதவு பூட்டப்பட்ட நிலையில், கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு மாணவி அனிதா கழுத்தில் காயத்துடன் சடலமாக கிடந்ததை பார்த்த  அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |