தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இவற்றில் சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடிக்கிறார். அத்துடன் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
சென்ற வருடம் வெளியாகிய இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விடுதலை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகிவரும் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் இப்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Stills from the sets of #VetriMaaran's #Viduthalai.@sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @GrassRootFilmCo @RedGiantMovies_ @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/0i39mii4nB
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2022