விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் வருடம் மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது ஏராளமான விடுதலை புலிகள் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன் தினம் அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனை பேசியுள்ளார்.
அப்போது கூறியதாவது, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகளும் ஐந்தாம் மனித உரிமை கவுன்சிலில் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கபட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவிற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும். இந்த நிலையில் ஐந்தாம் மனித உரிமைகள் கவுன்சில் இலங்கையில் நல்லிணக்கம் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. மேலும் 20 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்திருக்கின்றது. இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நமது வர்க்கத்தை வரக்கூடிய உதவிகளை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.