பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோடு கல்வி இணைய செயல்பாடுகளும் தேவை என்ற அடிப்படையில் கணினி, அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, கட்டடக்கலை, வாழ்வியல் கல்வி கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5000 தொகுப்பூதியமானது 2021 ஆம் ஆண்டு 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
மரணம் ஓய்வு என 4000 பேர் வேலையில் இல்லை. இதனால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணி புரிகிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டசபையில் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய குரல் கொடுத்தது. திமுக வின் உங்கள் தொகுதி, ஸ்டாலின் விடியல் தரப்போகிறார் நிகழ்ச்சியிலும் நேருக்கு நேர் பகுதி நேர ஆசிரியர்கள் இடையே தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பேசியபோது திமுக ஆட்சிக்கு வந்த உடனே நிரந்தரம் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உறுதியளிக்கப்பட்டது.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை சேர்க்கப்பட்டது இதனால் வருகிற பட்சத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பேசும்போது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 10 ஆண்டுகளாக சட்டசபையில் திமுக குரல் கொடுத்தது.
தற்போது ஆளும் கட்சியாக திமுக செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறது. இதனால் ஆட்சிக்கு வந்த உடனே நிரந்தரம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்த்தோம்.100 நாட்களில் நிரந்தரம் ஆகிவிடுவோம் என பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேறும் என்று நினைத்தோம். ஆனாலும் கால தாமதமாகி வருகிறது. எனும் பட்சத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்து விடியல் தருவார் என வேண்டுகிறோம் என கூறியுள்ளார்.