Categories
தேசிய செய்திகள்

விடாமல் அழுத 4 வயது குழந்தை…. கொன்று வீசிய கொடூர தந்தை… தாய் என்ன ஆனார்…?

மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக வசித்து வந்தார். கடந்த வியாழனன்று அவரின் நான்கு வயது மகள் அழுது கொண்டிருந்தார். எவ்வளவு சமாதானம் கூறியும் அழுகையை நிறுத்தவில்லை.

அதனால் கோபம் கொண்ட தந்தை மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தனது மகளின் சடலத்தை எடுத்துக்கொண்டு மனைவியை தேடி அழைந்துள்ளார். எங்கும் மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் அவர் வேலை செய்யும் ஸ்பா அருகே மகளின் சடலத்தை வீசி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வாசுதேவ குப்தாவின் தம்பி ரவி வீட்டிற்கு வந்தபோது யாரும் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மகளை தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வாசுதேவ குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |