விஜே மற்றும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா நடிப்பில் தயாராகியிருந்த ‘கால்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும் வலம் வந்த சித்ராவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் சில நாட்களுக்கு முன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரது மறைவால் தமிழ் திரையுலக பிரபலங்களும் , ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் இயக்குனர் சபரி இயக்கத்தில் நடிகை சித்ரா நடித்திருந்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . நடிகை சித்ராவின் இந்த முதல் படமே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது என ரசிகர்கள் கவலையுடன் உள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது .