Categories
சினிமா

விஜய் முடிவு…. விஜய் இயக்கம் தேர்தலில் போட்டி…. ரசிகர்கள் உற்சாகம்….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது படத்தை பயன்படுத்த விஜய் அனுமதி அளித்துள்ளார். அப்படியானால் அரசியல் கட்சிகளுக்கு விஜய் டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா?… என கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |