சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்நிலையில் பூஜா ஹெக்டே நேற்று தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தளபதி பற்றி ஒரே வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு பூஜா ஒரு வார்த்தையில் தளபதி பற்றி கூறுவது கடினம் என்றும் வேண்டுமென்றால் முயற்சிக்கிறேன் என்று ஸ்வீட்டஸ்ட் எனக் கூறியுள்ளார்.