வாரிசு திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இந்த நிலையில் இத்திரைப்படம் பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, செல்லத்தோட வேலை பார்த்து ரொம்ப வருஷமாச்சு. கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றோம். இத்திரைப்படம் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். கில்லி திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்துள்ள நிலையில் பிரகாஷ்ராஜ் பழசை மறக்காமல் விஜய் செல்லம் என சொல்லியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.