விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஐஸ் வைக்கும் பிரபல நடிகை.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் பட வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாஸ் காட்டி வருகின்றது. விஜய் தற்போது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.
விஜய் படத்தில் நடிப்பதற்காக இளம் நடிகைகள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தால் ரசிகர்கள் இடையே பிரபலமாகலாம், மார்க்கெட் உயரும் என்பதற்காக போட்டி போடுகிறார்கள். இந்த நிலையில் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என முயற்சித்து வருவதாக செய்திகள் வருகின்றது. கீர்த்தி சுரேஷ் தனது இணையப்பக்கத்தில் விஜய் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். விஜய் ரசிகர்கள் தளபதி67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஐஸ் வைப்பதாக கூறுகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.