Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் நினைத்திருந்தால் இதை வேண்டாம் எனக் கூறி இருக்கலாம்”…. மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி…!!!

நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு விக்ரமனின் “பூவேஉனக்காக” திரைப்படம் முதல் வெற்றியாக அமைந்தது. அதன்பின் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து இன்று வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த படத்தில் பல காட்சிகள் விஜய்க்கு சவால்விடும் வேடத்தில் விஜய் சேதுபதி அசத்தியிருப்பார். எந்த ஒரு முன்னணி ஹீரோ தன் படங்களில் மற்ற ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். விஜய் நினைத்திருந்தால் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அவர் கூறி இருக்கலாம். ஆனால் அவர் நான் நடிக்கும் காட்சிகளை கண்டு எனக்கு ஊக்கம் அளித்தார். அவரால் தான் எனக்கு மாஸ்டர் படத்தில் அந்த அளவு முக்கியத்துவம் கிடைத்தது எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |