விஜய் டிவி பிரபலம் புகழின் திருமணத்தில் பங்கேற்ற பொழுது சசிகுமார் தான் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 1-ம் தேதி தனது காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இத்திருமண நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிலையில் திருமணத்தின்போது சசிகுமார் பங்கேற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அன்பு தம்பி புகழ் பென்சி
இருவரும் இணைந்த⁰இந்த சிறந்த நாளில்⁰என்றும் மகிழ்ச்சியும்⁰அன்பும் பொங்க ⁰வாழ்த்துகின்றேன்..! இனிய⁰திருமண நாள் வாழ்த்துக்கள் @VijaytvpugazhO #PugazhBensiya #marriage pic.twitter.com/YvhGeoVjJ6— M.Sasikumar (@SasikumarDir) September 1, 2022