விஜய் டிவி பிரபலம் வினோத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் வினோத்.
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .