டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் ஜி பி முத்து விஜய் டிவியில் பிரபலமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் சிறப்பு நூலில் நடிக்க உள்ளார். நேற்று படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.