நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகிய “அந்தகன்” படத்தில் அனிருத்- விஜய்சேதுபதி இணைந்து ஒரு பாடலை பாடி இருக்கின்றனர்.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகிய அந்தாதுன் திரைப்படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி ரூபாய். 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இருப்பினும் சீனாவில் இப்படத்தின் வசூல் நம்பமுடியாத அடிப்படையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூபாய். 300 கோடியைத் தாண்டியது. இதன் வாயிலாக சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி திரைப்படங்களில் 3ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர்ஸ்டார் (ரூபாய். 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படம் சிறந்த நடிகர் – (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்தி திரைப்படம் என 3 தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்று இருக்கிறார். பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின் இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக் கொண்டார்.
அந்தகன் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அத்துடன் வசனம்-பட்டுக்கோட்டை பிரபாகர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து “டோரா புஜ்ஜி” என்ற ஒரு பாடலை பாடி இருக்கின்றனர். இந்த பாடல் பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.