நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மஸ்டர் செப் என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்நிலையில் மஸ்டர் செப் நிகழ்ச்சியின் தெலுங்கு புரோமோ படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார் . அப்போது அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைபடத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி, தமன்னா இருவரும் தர்மதுரை படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .