Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் . செவன் ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி இந்த படத்தில் ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹூந்திரன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த பெயர் சுருக்கமாக ‘ரேம்போ’ என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

Categories

Tech |