விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
@sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/FCK78hYIQA
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 14, 2021
செவன் ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (நவ.15) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.