Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் கொடுத்த பரிசு… சஞ்சீவ் போட்ட பிரெண்ட்ஷிப் பதிவு… குவியும் லைக்ஸ்…!!

நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் விஜய்யுடனான நட்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ மாஸ்டர் ‘ திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் விஜய்யுடனான தனது நட்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் அணிந்திருந்தது போன்ற சட்டையை சஞ்சீவ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இதுகுறித்து சஞ்சீவ்,” எட்டு வருடங்களுக்கு முன் வேலாயுதம் பட சமயத்தின் போது விஜய் எனக்கு இந்த சட்டையை கொடுத்தார். இன்றும்  அந்தச் சட்டை எனக்கு  பக்காவாக செட் ஆகிறது நண்பேன்டா” என பதிவிட்டுள்ளார். சஞ்சீவின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பலர்  லைக்ஸ்  போட்டு வருகின்றனர்.

Categories

Tech |