நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் 64 வது படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து 65வது படத்தை இயக்குவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதற்கு முன்னதாக விஜயின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் விஜயை வைத்து சர்க்கார் படம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது