ஷாஜஹான் பட நடிகை ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரிச்சா பலோட் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான ரிச்சா பலோட்டிற்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரிச்சா பலோட் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.