Categories
சினிமா

விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸாகும் தேதி இதுதான்…. ரசிகர்களுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதி புரூஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் தற்போது வெளியாகும் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது விஜயின் வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |