Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட வாய்ப்பை நழுவவிட்ட மிஷ்கின்… எதனால் தெரியுமா?…!!!

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

Selavaraghavan joins the cast of Vijay's Beast- Cinema express

மேலும் இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் முதலில் இயக்குனர் மிஷ்கின் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் பிசாசு-2 பட பணிகளில் மிஷ்கின் பிஸியாக இருந்ததால் பீஸ்ட் படத்தில் நடிக்க அவரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதையடுத்து  அவருக்கு பதில் செல்வராகவன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் .

 

Categories

Tech |