நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகின்றார். ஏப்ரல் மாதத்தில் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அரசியல்வாதியாக செல்வராகவன் நடித்திருக்கிறாராம். விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி-66 நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அண்மையில் வெளியானது.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மகேஷ் பாபுவின் மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தளபதி 66 முழுக்க முழுக்க குடும்பம் பாணியான கதையாகும். இப்படத்தின் கதையை விஜய் முதலில் கேட்கும் போது இப்படிப்பட்ட கதைகளை கேட்டு 20 வருடங்கள் ஆகின்றது என தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கூறியிருந்தாராம். இத்திரைப்படமானது வருகின்ற தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது.