அஜித்தின் ரசிகர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
அஜித் திரைப்படத்தை திருவிழாபோல் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீஸாகியதால் ரசிகர்கள் திருவிழாபோல் ஜெகஜோதியாக கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது வலிமை ரிலீஸ் ஆகியதால் கட்டுப்பாட்டை இழந்த ரசிகர்கள் சிலவற்றை எல்லையை மீறி செய்திருக்கின்றனர். அண்மையில் அஜித் ரசிகர்கள் பால் வேனிலிருந்து பாலை திருடியதாகவும் அதற்கான வீடியோவையும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் போலீசார் மீதே குற்றம் சாட்டியுள்ளனர். வலிமை ரிலீஸான முதல் நாளன்று ரசிகர்கள் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளனர்.
அதாவது விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது போலீசார் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் அஜித் திரைப்படங்கள் வெளியானால் மட்டும் போலீசார் கடிந்து கொள்கின்றனர். மேலும் விஜய்யிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் போலீசார்கள் இப்படி செய்கின்றனர் என அஜித்தின் ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த ரசிகர் நிதானத்தில் இல்லாமல் தான் பேசியுள்ளார். இவர் இப்படி பேசியதால் மற்ற ரசிகர்களும் கவலையில் உள்ளனர் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படமானது பாராட்டுகளை பெற்று இருந்தாலும் சிறிது விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். இதன் விளைவாக விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே மீண்டும் மோதல் தொடங்கியிருக்கின்றது.