விஜய்யின் அரபிக் குத்துப் பாடலின் ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து பாராட்டியுள்ளார் விஜய்.
இளைய தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அண்மையில் இப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இது இங்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. இந்த அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடி, இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய், சிவகார்த்திகேயனுக்கு கால் பண்ணி நன்றி கூறியுள்ளாராம். அவர் கூறியதாவது “பாட்டு பிரமாதம்” என்று பாராட்டி இருக்கின்றார். மேலும் “உனக்கு அரபி மொழி கூட தெரியும் போல” என்று காமெடி செய்துள்ளார்.